பைந்தமிழ் குட்டிஸ் - புரட்டாசி இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 3.43   |   7 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - புரட்டாசி இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2019

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு இதழையும் ரசித்துப் படித்து மகிழும் உங்கள் பிஞ்சு உள்ளங்களில் பஞ்சு மிட்டாயாக தொட்டதும் மெத்தென முத்தென வரும் படைப்புகள் பற்றி ஒரு சிலவரிகள் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நானும் குழந்தையாகி நரிக்கதை கேட்பதுபோல் உணர்கிறேன். காஸ்மீனா கற்பனையா? நிஜமா? என்று சத்யா சுந்தரிடம் கேட்கவேண்டும் என்ற அளவிற்கு கற்பனைக்கு சிறகுகள் தரும் காஸ்மீனா தொடரில் உங்களுக்கு பிடித்த டிங்குவுடனும் கீதாவுடனும் உல்லாசமாக பயணிக்க அனைவருக்கும் அழைப்பு. மகாராஜின் ஜைன் புதிர்கள் மற்றும் சங்கீதா அவர்கள் வழங்கும் வட்டத்துக்குள் வார்த்தை வழக்கம்போல் வியக்க வைக்கும். குழந்தைப் பாடலை குழலோசையாக்கி வழங்குகிறார் அறிவுச்செல்வன் அவர்கள். அறிவியல் தொடருடன் சங்கர் நாராயணன் அவர்களும் தமிழ் அமுதம் என்ற தலைப்பில் வளர்மதி பாரத் அவர்களும் இயல்பாக எழுதுவதுடன் இதயங்களிலும் எழுதுவார்களோ என்றே சொல்லத் தூண்டும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். கைவினைக் கலைகள் சொல்லித் தர லஷ்மி ஷாலினி அவர்கள் இணைந்து எழுத இசைந்திருப்பது இனிமையிலும் இனிமை எனலாம். புத்தகம் சூழ் உலகத்தில் புத்தகங்களால் நம்மை புரட்டி எடுக்கும் படைப்புகள் வழங்க சிவா அவர்கள் இணைந்து எழுதுவது மிகவும் சிறப்பு. பைந்தமிழ் வழங்கும் புரட்டாசி மாத இதழை உங்கள் கரங்களில் வழங்கி வாழ்த்தி மகிழ்கிறோம். நன்றி!

மேலும் காண...