துப்பறியும் நாவல் சக்கரவர்த்தி தமிழ்வாணனின் படைப்பு
காமிக்ஸ்
சங்கர்லால் ஸ்விட்சர்லாந்து சென்றிருந்த வேளையில் அவரது வீட்டிற்கு வரும் உதவி போலீஸ் கமிஷனர் வகாப் பிரபல வியாபாரி கோகுல் தாஸின் மகன் சங்கரதாஸ் கடத்தப்பட்டதை தெரிவிக்கிறார். சங்கர்லால் ஊரில் இல்லாத சூழ்நிலையில் தானே துப்பறிந்து கண்டுபிடிப்பதாக கிளம்புகிறான் அவரது வேலையாள் கத்தரிக்காய். முதலில் கோகுல்தாஸும் பின்னர் கத்திரிக்காயும் ஏமாற்றப்பட யாரோ வேறு இரு கடத்தப்பட்ட சிறுவர்கள் மீட்கப் படுகிறார்கள். இருந்தாலும் மனந்தளராமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கத்திரிக்காய் சங்கரதாஸை எப்படி மீட்டு திருப்பிக் கொண்டு வருகிறான் என்பதை ஒரு படக் கதை வடிவில் படிப்பது வித்தியாசமான அனுபவம்! முதலில் நாவலாக எழுதப்பட்டு அதன் பின் படக்கதையான இந்த கத்திரிக்காய் கண்டுபிடித்தான் தீபாவளிக்கு ஒரு மொறுமொறு பலகாரமாக பிடிஎஃப் வடிவில் புலம் பெயர்ந்த தமிழ் சிறுவர் சிறுமியர் எளிதில் தமிழ் படிக்க தமிழ் காமிக்ஸ் புத்தகம் உதவிடும். இந்த புத்தகத்தின் உரிமம் பைந்தமிழ் தளத்திற்கானது இல்ல. உலகெங்கும் பரவியுள்ள தமிழ் ஆர்வலர் சிலர் குழந்தைகளுக்காக பகிரக்கோரியதால் பகிரப்பட்டுள்ளது. மாற்றுக்கருத்துக்களை தயவிட்டு பைந்தமிழ் குழுவினரிடம் உங்கள் கருத்துக்களை pyntamil.uk@gmail.com பகிருங்கள்.