பைந்தமிழ் குட்டிஸ் - பங்குனி இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

படப்புத்தகம்

Score: 4.40   |   5 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - பங்குனி  இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

பைந்தமிழ் வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம். பாங்கான பங்குனி மாதம் இதோ பிறந்து விட்டது. உங்கள் பூங்கரங்களில் பகட்டாய் மின்னுகிறது , 'பைந்தமிழ் குட்டீஸ் ' பங்குனி மாத இதழ். உத்திர நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கே அதிக மகிமைகள் உண்டு. தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம். பழனியில் காவடி உற்சவம், சென்னை மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் எனத் தமிழகமே விழாக்காலம் பூணும் இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி மாதத்தில் நம் பைந்தமிழ் குட்டீஸ் ஓராண்டு நிறைவு மலராய் முழுமை பெறும் சிறப்பும் இணைகிறது. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் எனும் தெய்வப்புலவன் வள்ளுவனின் வாக்கிற்கினங்க நம் இதழில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் அதனை உருவாக்கிய ஆசிரியரின் சீரிய முயற்சியும், தமிழின் தரமும், படிப்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தெள்ளுதமிழின் சுவையும், சொல்லாடலும் சிறப்பாக அமைந்துள்ளது. நமது பைந்தமிழ் குட்டீஸில் பல பகுதிகள் இப்பொழுது ஒலிவடிவிலும் ...நீங்கள் படித்து மட்டுமல்ல கேட்டு மகிழவும்.... அன்புதனில் செழிக்கும் வையம் என்ற சிந்தனையை இப்பொழுதும், எப்பொழுதும் செயலாக்குவோம் என்ற வேண்டுகோளோடு இதோ பைந்தமிழ் குட்டீஸ் பங்குனி மாத இதழ்!

மேலும் காண...