பைந்தமிழ் குட்டிஸ் - உம்பளச்சேரி இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 4.25   |   4 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் குட்டிஸ் - உம்பளச்சேரி இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

குட்டீஸ்களே! ஊட்டீஸ்களே! இனிய தமிழ் சின்ன மயில்களே! சிங்கங்களே! பைந்தமிழ் இதழ் படித்து வருகிறீர்கள்தானே! அருமை! திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று நம் தாத்தா பாட்டி, முன்னோர்கள் சொன்னதோடு மட்டுமல்ல, அப்படி அங்கு சென்று செல்வத்தோடு அந்த நாட்டையும் ஆண்டதால், வளமானது வாழ்க்கை மட்டும் இல்லை, நம் தமிழ்மொழியும், நமது பண்பாடும் என்பது உனக்கு தெரியும்தானே! வெளிநாட்டில் எனக்கு ஏதுக்கு தமிழ்? அதுவா என்னை காக்கும்?. கண்ணே உன் கேள்வி புரிகிறது! புத்திசாலி நீ! தமிழ் உன்னை காக்கும் மொழி இல்லை பிள்ளைகளே! தமிழ் மொழி உங்களை தமிழனாக, நல்ல மனிதனாக ஆக்கும் மொழி. அன்னையும், பிதாவும் முன்னறித் தெய்வம் எனச்சொல்லி மாதா, பிதா,குரு, தெய்வம் என உன் பண்பாட்டுச்சிறப்பை, உன்னை அறியச்செய்து எவ்வினம் எப்படி வாழ்ந்தாலும், என்னினம் தனி இனம், அது ஈர்ரிரண்டு ஆண்டுக்கு முன்பே இலக்கணம் கண்ட மொழியினம் என்ற பெருமை நீ பேசவும், நாகரீகம் என்றால் என்ன? நல் வாழ்வு வாழ்வதெப்படி, வெந்த ததை தின்று விட்டு வந்தது வாழ்வென்று வாழ்தல்ல வாழ்க்கை, அக வாழ்க்கை, புறவாழ்க்கை என்றால் என்ன, அன்பு, பாசம், காதல்,வீரம், பக்தி கருணை என்பதுடன் இயற்கையை இறைவனாக மதித்து, தொழுது, வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடி, வாயில்லா உயிர்களை கொல்லாமையின், குணம் சொல்லி எளிமையுடன் ஒரு செம்மையான வாழ்வு வாழ்ந்து, உன்னை மனிதருள் மாணிக்கம் ஆக்கி செம்மொழி எம்மொழி என பொருமையுடன், உலகில் நீ எங்கிருந்தாலும், பேசி வாழச்செய்யும் அருமை மொழி உன் தாய் மொழி தமிழ் மொழி தானே! அதை பைந்தளிர் உனக்கு இந்த பைந்தமிழ் இதழ் மாத மாதம் பக்குவமாய் சொல்கிறது! படித்து தெரிந்து பக்குவுமாய் பாதுகாத்திடு! அடுத்த மாதமும் வருவேன் அன்பே நீ என்று!

மேலும் காண...