பைந்தமிழ் சஞ்சிகை - தேனி மலைமாடு இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் சஞ்சிகை - தேனி மலைமாடு இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

அன்பு இளம் பிள்ளைகளே! நலந்தானே! பள்ளி திறந்து பயந்து பயந்து செல்ல வேண்டியதாய் உள்ளதா?. விழிப்புடன் அன்னை, தந்தை, ஆசிரியர் சொல்லும் அறிவுரைப்படி நடங்க, சரியா!!..👍 மாதா, பிதா,குரு தெய்வம் என்பது தமிழ் நமக்குச் சொன்ன தாரக மந்திரம். உனக்கு உயிரும், உடலும் தந்தது அம்மா நம்மைக் காக்க உழைப்பவர், பாதுகாப்பவர் பிதா(அப்பா), நமக்குப் பள்ளி/கல்லூரியில், நமக்கு அறிவு கற்பிப்பவர் குரு (ஆசரியர்), நாம் எல்லாம் இவ்வுலகம் வாழ அருள் புரிவது தெய்வம். இதில் குருவை தான் நாம் அதிக காலம் இருந்து அறிவை கற்று, வளர்த்துக் கொள்கிறோம்! உண்மைதானே! எல்லா பாடங்களை கற்கும் போது, தமிழ் மொழியையும் கற்று வருவது ஏன், அது நாம் முதலாவதாக வணங்கும் நம் தாய் நமக்கு கற்ற தந்த மொழி, ஆதலாலே அது தாய் மொழி, நம் தாய் நமக்கு உயிர் தானே, அவரின் மொழியும் உயிர்தானே! அதனாலேயே, நம் தாய்மொழியாம் தமிழினைக் கற்பது நமது கடமை தானே! அதை நாம் கற்க நமது பைந்தமிழ் சாரலில், உங்கள், அக்கா,அண்ணன்'கள் எத்தனை பாடல்,கட்டுரை, கதை, புதிர், படம் வரைதல், என மாதா மாதம் எழுதி வருகிறார்கள். அதற்காக எல்லோருக்கும் ஒரு நன்றி சொல்லாம் தானே! நம் சங்கீதா அக்கா இந்த இதழுடன் தன் 12 தமிழ் அறிஞர்களை உங்களுக்காக நன்கு ஆராய்ந்து தொகுத்துத் தந்துள்ளார். இது குட்டிஸ் உங்களுக்கான ஒரு முழு வருடத்தின் உழைப்பு. அவருக்கு நம் பாராட்டுகளைக் கூறிக்கொள்வோம். சரி! குட்டீஸ், இந்த மாத பைந்தமிழ் சாரலையும் படித்து, படிக்கக் கேட்டு கற்றுக்கொண்டே இருங்க! ஏன்னா, " கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு". புரியலையா? அடுத்த மாதம் சொல்கிறேன்! அதுவரை சமர்த்தா படியுங்கள்! ஓகே வா!.

மேலும் காண...