பைந்தமிழ் சஞ்சிகை - புலிக்குளம் காளை இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 5.00   |   2 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் சஞ்சிகை - புலிக்குளம் காளை இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2020

புத்தகம் பற்றிய சிறுவுரை

வளர் இளம் தளிர்களே,குட்டிகளே, சுட்டிகளே! வணக்கம்🙏 குளிர்காலம்,குயில் கூட்டுக்குள்,நாமெல்லாம், குயில்ட்டுக்குள், குடியிருப்பது சுகம் தான்,காலையில் எழுவது, பள்ளிக்கு கிளம்புவது எல்லாம் சிரமம்தான், ஆனாலும் என்ன செய்வது கல்வி கற்பது நம் கடமை இல்லையா? கல்வி கற்காமல் வாழ முடியாதா? முடியும், ஆனல் கற்றால் இன்னும் சிறப்புடன் வாழ அது வழி செய்யும், கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்று சொன்னேன் அல்லவா! அது என்ன? நாம் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை கற்று கொண்டே இருக்க வேண்டும் என்பது நியதி. குழந்தையாய் இருக்கும் போது பள்ளிக்கல்வி, வளர்ந்த பின் வாழ்க்கைக்கல்வி, எவ்வளவுக்கு கற்கிறோமோ அவ்வளவுக்கு அறிவும், அனுபவமும் கூடும். அதிலும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் உள்ள நல்ல பல கருத்துக்கள் நம்மை இன்னும் நெறிபடுத்தும், முறைபடுத்தும், தமிழின் இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறை யில் நாம் கற்று கொள்ள உள்ளது உளகளவு. கவலை உனக்கு வேண்டாம், அதை உனக்கு கற்பிக்க பைந்தமிழ் சாரல் அண்ணாக்களும் அக்காக்களும், நாங்கள் இருக்கிறோம். குட்டிகளே! இந்த தமிழ் மொழியை நம் முன்னோர்கள், புலவர்கள், அரசர்கள் என பலர் இதற்கு என பல தமிழ் சங்கம் அமைத்து வளர்த்தனர். இன்றும் உலகெல்லாம் சங்கம், பள்ளிகள் அமைத்து வளர்த்து, காத்து வருகிறார்கள். அப்படியானவர்களில், ஒரு நல்லவர், வல்லவர், வள்ளல் பாண்டித்துரையும் ஒருவர், ( நான் என்னை சொல்லவில்லை😊) அவர், மதுரையில் தன் சொத்துக்களை தந்து தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர உதவியவர். ஆவர் பற்றிய ஒரு கட்டுரையை சங்கீதா அக்கா தந்துள்ளார். அதையும் மற்ற நல்ல படைப்புகளையும் இந்த மாத இதழில் பிடித்து படித்து, மேலும் தமிழ் கற்று நீண்ட வாழ்வு,உடல், மன, நலத்துடன் வாழ வாழ்த்தி விடைபெருகிறேன். கண்மணிகளே!

மேலும் காண...