பைந்தமிழ் சஞ்சிகை - பர்கூர் காளை இதழ்

சிறுவருக்கான தமிழ் மாத இதழ்

இதழ்

Score: 5.00   |   1 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
பைந்தமிழ் சஞ்சிகை - பர்கூர் காளை இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2021

புத்தகம் பற்றிய சிறுவுரை

நெற்களஞ்சிய பொன் வைரமணிகளை வரவேற்கும் தைத் திருநாளில் பொங்கல் எனும் அமுதம் பொங்கும் அற்புத நன் நாளில் பைந்தமிழின் தையிற்கான பதிவாய் இம்மாத சஞ்சிகையை வரவேற்போம் குமரிக்கிழவிகளின் குழவையிட்டு! நாள் ஒருமேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்ந்து நிற்கும் பைந்தமிழின் சஞ்சிகை நெற்கதிர்களே! உங்களோடு இணைவதற்கு இதோ இந்த மாதமும் உங்கள் விரல்களுக்குள் இடம் தேடி வந்துவிட்டேன். பிஞ்சு பொன் விரல்களின் ஸ்பரிசத்தில் பைந்தமிழ் தை இதழ் புன்னகையாய் பூரிக்கின்றாள். அடுக்களை தொட்டு ஆடுகளம் வரை எட்டும் இன்பத்தமிழோடு இன்றும் பைந்தமிழின் வாசம் பரவசமாய் வீசும் சஞ்சீவி சஞ்சிகை நம் பைந்தமிழ்! தமிழுக்கான தேடலாய் மழலை மொழி பேசும் வருடலாய்! முத்தான ஆசிரியர்களின் முதுமொழி கொஞ்சும் வார்த்தைகளின் வரிவடிவங்களாய் வாசிக்க தைப் பைந்தமிழோடு உரையாடுங்கள்! இந்த மாத புதிய அறிமுகங்களாய் நம்மிடையே வலம் வரும் புதிய நபர்களுக்கான ஆசிரியர்கள் திரு. சக்தி மற்றும் சுஜாதா கோபி? இருவருக்குமான ஜெய பேரிகையை கொட்டுவோம் வாருங்கள் பாரதியின் வரிகளில்! காளைகளின் அணிவகுப்பில் தையின் நாயகன் யார் என்ற ஆர்வத்தில் அட்டைப்படம் அசத்தலாய்! எழுத்துக்களின் பொற்கோவில் பைந்தமிழ்! ஏறு போல் வீறு நடை போடட்டும் அகில உலகமும் வாசிக்கட்டும் இந்த தையிலிருந்து நம் பைந்தமிழ் சஞ்சிகையை! மனமார்ந்த வாழ்த்துக்களுடன் தை மகளே பைந்தமிழ் காளையோடு களம் ஏறி வா.....! எம் மழலைக்கூட்டம் மகிழ்ந்து கொண்டாட!

மேலும் காண...