பைந்தமிழ் சஞ்சிகை - பரதம் இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

இதழ்

Score: 0   |   0 வாக்களிப்பு

நூலினை படிக்கவும்
 பைந்தமிழ் சஞ்சிகை - பரதம் இதழ்
நூலாக்கம்: UK படைப்பாளர் குழு
வருடம்: 2021

புத்தகம் பற்றிய சிறுவுரை

"பைந்தமிழ்" எனும் இந்தச் சிறுவர்களுக்கான இதழ் வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டினுள் கால் பதிக்கிறது. தாம் பிறந்த மண்ணின் இயல்பு வாழ்வைத் துறந்து அந்நிய நாட்டிற்குப் புலம் பெயர்ந்து தமது வாழ்வாதரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எத்தனை சிரமமானது என்பதை நாம் நன்கறிந்தவன். அத்தனை சிரமங்களுக்கிடையில் தமக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் தாய்மொழியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவோரின் சேவை மகத்தானது. புலம்பெயர் வாழ்க்கையில் அன்றாடம் வேற்றுமொழித் தாக்கங்களினால் பாதிக்கப்படும் எம் சிறுவர்கள் தமது அடையாளத்தை சுலபமாக இழந்து விடும் சாத்தியக்கூறுகள் அதிகம். அவர்களுக்கு எமது தாய்மொழியின் தொன்மையையும், கலை, கலாச்சாரத்தின் வலிமையயும் எடுத்துச் சொல்வதின் முக்கியத்துவம் வெறும் வார்த்தைகளிலடங்காது. அதற்கான முனைப்பில் "பைந்தமிழ்" ஆற்றிவரும் பங்களிப்பு இன்றியமையாததொன்றாகிறது. கதைகள், வரலாற்று தலைவர்கள், சமையல் குறிப்புக்கள், ஓவியங்கள், பல்சுவை பகுதிகள் மலர்ந்த நம் இதழில் இந்த வருடத்தின் தொடக்கம் முதல் அயல் நாட்டில் வாழும் குழந்தைகளுக்கான மருத்துவ பகுதி ஆரம்பமாகிறது. உங்கள் குழந்தைகளுக்கு தமிழுடன் இணைய ஏற்படும் தயங்களை களைகிறார். புலம்பெயர் வாழ் தமிழ்ச் சமூகம் தனது தொடரும் ஆதரவினால் இம்முயற்சியை வெற்றிகரமாக்கி எமது இளம்சிறார்களின் படைப்பாற்றலை வளர்க்கும் பணிக்கு தம்மாலான உதவிகளைப் புரிய வேண்டுமென அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.இச்சித்திரை "பைந்தமிழ்" இதழை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் காண...