பைந்தமிழ்ச் சிறப்பு தேர்வு

பைந்தமிழ் சஞ்சிகை - கரகம் இதழ்

சிறுவர்க்கான மாத சஞ்சிகை

"தமிழுக்கும் அமுதென்று பேர் - இன்பத் தமிழ் அந்தத் தமிழெந்தன் உயிருக்கு நேர்" என்றார் எமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழர் எங்கெங்கு வாழ்கிறார்களோ? எச்சூழல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்களோ அத்தனையையும் ஏற்றுத் தம்மொடு தமது தாய்மொழியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் என்றும் பின் தங்கியதேயில்லை. அந்த வழியில் இன்று எமது புலம்பெயர் தேசமான ஐக்கிய இராச்சியத்தில் தமிழினை எமது அடுத்த தலைமுறையை நோக்கி எடுத்துச் செல்லும் மகத்தான பணியில் பலர் தமது சேவையை அன்னைத்தமிழுக்கு ஈந்து வருவதைப் பார்க்கையில் உள்ளத்தில் ஆனந்த ஊற்று பெருக்கெடுத்து ஓடுகிறது. "பைந்தமிழ்" எனும் இவ்வினிய இதழ் இலத்திரனியல் ஊடக வழியாக அவ்வூடகத்தின் பயன்பாட்டின் முழுமையைப் புரிந்து கொண்ட இளையோரின் கைகளிலே தவழுவது ஒரு அரிய செயலாகும். பல்சுவை நிறைந்த பல அம்சங்களை உள்ளடக்கி அதை ஆர்வமும், ஆற்றலும் நிறைந்த என் இனிய படைப்பாளர்களின் மூலம் உருவாக்கி திறம்பட நடத்தும் அனைவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள். இந்த அருமையான இதழைப் படித்து ஆர்வத்துடன் அனைவரும் ஆதரவை நல்குவீர்கள் என்பது உண்மை. இந்த வைகாசி " பைந்தமிழ் " இதழை வெளியிட்டு வைப்பதற்கான சந்தர்ப்பத்தை அளித்த நிர்வாகத்தினருக்கும், அனைவர்க்கும் பொதுவான, அனைவர்க்கும் மேலான அந்த இறைக்கும் எனது மனமுவந்த நன்றிகளும், வணக்கங்களும். தமிழெந்தன் உயிருக்கு நேராம் தமிழெந்தன் வாழ்வுக்கு நீராம் தமிழெந்தன் மூச்சுக்குக் காற்றாம் தமிழன்றி நான் வெறும் நீறாம்

பைந்தமிழ்ப் பரண்